உடன்பிறப்பே,
எதையும் தாங்கும் இதயமிருப்பதாலேயே, இதையும் தாங்குகிறான் இந்த மறத்தமிழன். அடி மேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பது தொல்மொழி, ஆனால் எத்தனையோ இடிகள் விழுந்தும், இன்றும் அயராது இந்து மத எதிர்ப்பில் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும் நாம் இந்த இன்னலையும் சந்திப்போம் !
தேசிய நீதிபதி நியமன கூட்டமைப்பு - NJAC - வழக்கில் நீதி மன்றத்தை ஆதரித்தும், இடஒதுக்கீடு உயர் படிப்பில் கூடாது என்று ஓர் அடி !
சொத்து குவிப்பில் மேரியின் மறை நீதியரசர் தீர்ப்பளித்தும், அது செல்லாது என்று ஆதி திராவிட நீதியரசரால் ஓர் அடி !
"ராஜாத்தி - கனிமொழியின் அம்மை, கனிமொழி ராசாத்தியின் மகள்" என்று நாம் சட்டசபையில் அளித்த வாக்கு இன்று துரத்தி துரத்தி அடிக்கிறது !
இன்று உச்ச நீதி மன்றம், தமிழனுக்கு தண்ணி தர மறுக்கும் கன்னடர் ஒரூவர் வலையில் வீழ்ந்து, இன்று இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் எம்மகளுக்கு பெரும் அநீதி இழைத்திருக்கிறது.
லஞ்சம் என்பது வேறு, கையூட்டு என்பது வேறு, அன்பளிப்பு என்பது வேறு என்று 1967-லேயே தமிழனுக்கு புரிந்தது இன்றும் இந்தியர் பலருக்கு புரியாமல் இருப்பது நாம் "கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றி மூத்த குடி" என்பதையே காட்டுகிறது என்று பெருங்களிப்பு அடைவோம் !
இது இந்த திருக்குவளைக்காரனை, வெருங்குவளைக்காரானாக்க நடக்கும் ஆரிய சதி.
நடப்போம் குடும்ப வழி,
துடைப்போம் இந்தப் பழி,
எடுப்போம் நம் பொற்கிழி ....
கடைத்தொண்டன்
கட்டுமரம்