ஒரு வழியாக ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
1916-லிருந்து தமிழ்நாட்டில் துவங்கி, திராவிடம் என்று பேசி, மக்களை
சீரழிக்கும் கழங்கங்களுக்கு இது ஒரு சாவு மணியாக அமையுமா என்பதே ரஜினி
மக்கள் முன் வைத்துள்ள கேள்வி !!
"ஆண்டவன்" "ஆன்மிகம்" வழி நடந்து அரசியல் என்று தொடங்கி 'ஜெய் ஹிந்த்" என்று முடித்த ரஜினியை நாம் பாராட்டத்தான் வேண்டும் ! அதுவும் தமிழ்நாட்டில், பெரும் பிஜேபி தலைவர்களே இவ்வாறு செய்ததில்லை !
இதுநாள் வரை இந்து விரோதிக்கும், இந்து துரோகிக்கும் மாற்றி மாற்றி வாக்களித்தவர் இனி திருந்தி ரஜினிக்கு வாக்களிப்பார்களா அல்லது 1% வாக்கு அளித்து "தலைவா, நாங்கள் 1% அளித்தால் அது 100% மாதிரி" என்று பதிலளிப்பார்களா ?
வெறும் பிராம்மணர், பக்தி உள்ளவர் என்று ஏமாந்து ஜெயாவிற்கு வாக்களித்தவர் இனியும் வேறு வழியில்லாமல் ரஜினி பக்கம் சேர்ந்தாலே போதும் !! செய்வார்களா !!
இது திமுகவிற்கு ஒரு கிலி தரும் நிகழ்வே என்பதில் ஸந்தேஹமில்லை !!!