(Hilarious but he actually said this to his party cadres - give him a permanent term).
உடன்பிறப்பே,
வாழ்வோம் உழைத்து என்றுள்ள தொல் தமிழர் பரம்பரையில் வந்த கழகத்தை, வாழ்வோம் வழக்கினால் (சொத்து குவிப்பு) என்று மாற்றிய, வாழை மட்டைகள் நன்கு சிந்திக்கவேண்டும்.
மெய்ஞானம் போலி என்று பகுத்தறிவு போற்றியும், விஞ்ஞான முறையை சற்றும்
கைவிடாமல், சொதுக்குவித்தவனல்லோ இந்த திருக்குவளைக்காரன்? இதுவரையில்
நிலைத்த வழக்கு ஏதேனும் உண்டா சேர்க்காத சொத்துத்தான் உண்டா என்று
மறத்தமிழன் சற்று யோசிக்கவேண்டாமா ? தம்பி நீதியரசர் சர்க்காரியா எழுதிய
பாராட்டு மடலை அறிந்தவர்க்கு இதில் வியப்பேது ? குடும்பத்தில் (கழகத்தில்)
இருப்போருக்கு வியப்பு வராமல், வாய்ப்பளிப்பதையே "மக்கள் பணி மகேசன் பணி"
என்று திளைத்து வாழ்பனல்லவோ இந்த கடைத்தொண்டன் ?
இந்நிலையில், கழக ஆட்சியை சற்று நினைவு கொள்ளவேண்டும். முழு பெரும்பான்மை இருந்தும், பாதியில், மீதி வைத்து அடிபிடிகளிடம் ஆட்சியை விட்டு ஓடிய அம்மையாரெங்கே - பெரும்பான்மை இல்லாமலேயே, கூடா நட்பு இருந்தும் ஐந்தாண்டு முடித்த கழகத்தின் சாதனை எங்கே ? சம்சாரங்களில் இருந்து தொடங்கி, மின்சார நிறுவனங்கள் வரையில் அனைத்தையும் பராமரித்த கழகமேங்கே. அனைத்தையும் அரசே செய்யும் என சூளுரைத்து மின்சார கதியில் பணிகள் மட்டுமே செய்யும் அம்மையாரெங்கே. இதற்க்கு வேண்டாமா நிரந்தர தீர்வு ?
யோசித்துப்பார், குடும்பம் பெருகுகிறது, தமிழ் நாட்டை வட - தென் என்று பிரித்து இரு மைந்தர்கள் ஆண்டும் எத்தனை இன்னல்கள் ? இடையில் தேர்தல் வேறு, செலவு வேறு. தமிழ் நாட்டை முழுவதும் திருமங்கலம் ஆக்கிய எமது பணியை வெட்கமில்லாமல் தொடரும் அம்மையார் தேவைதானா ? தமிழன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாழைமட்டை ஆகி, சோற்றாலடித்த பிண்டமாகும் அவலம் நமக்கு தேவை தானா ?
இதற்க்கு ஒரேவழி என்னவென்று நான் விடுத்த அறைகூவலுக்கு நீ பொற்கிழி என்று தின் தோள் புடைக்க ஒலித்தது இன்றும் என் செவிகளில் தேனாய் பாய்ந்தாலும், தமிழர் நலம் கருதி நிரந்தர தீர்வு காண்பது எமது கடமையன்றோ ! ஆகையாலே எமது குறிக்கோள் "நிரந்தர ஆட்சி". ஆண்டாண்டு காலமாக கோலோச்சிய கடைத்தொண்டன் இன்றும் குடும்பத்தில் எழுதிவைக்க்வேண்டியது உயிலா, பாகப்பிரிவினையா என்று தெளிவு இல்லாமல் தத்தளிக்கும் நிலை கேடு தேவைதானா ?
விழட்டும் உன் ஒட்டு ! எழட்டும் நிரந்தர ஆட்சி !!
அம்மையாருக்கும் நிரந்தர ஆட்சி தந்தால் என்னவென்று ஒலிக்கும் குரலை ஒழி, கழகமே வழி, கொட்டட்டும் உன் பொற்கிழி.
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
No comments:
Post a Comment