டியர் ஜூனியர் உடன்பிறப்பே !
இது நாள் வரை இருவரில் ஒருவனாக இருந்த நான் இப்போது "தனி ஒருவன்" அரங்குகளில் பெரும் வெற்றி அடைந்த பிறகும், ஆட்சியில் அமர்வது வெறும் காட்சியாகி கானல் நீராகும் அபாயம் சூழ்ந்துள்ள நிலையில், இன்னும் "இருதலை" கொல்லி எறும்பாகத்தான் இருக்கின்றேன்.
இந்த இன்னல்களுக்கிடையே எனது "நமக்கு நாமே" பயணத்தை கேலி செய்து கொக்கரிக்கும் ஆரியவின சதியாளர்களை இனம் கண்டு அவர் மாயையில் விழமாட்டோம் என சூளுரைப்போம் !
இப்பயணத்தின் நோக்கம் "இனி உங்களுக்கு நீங்களே" என எடுத்துரைப்பதல்ல, இனி ஆட்சியில் அமரவேண்டுமானால் இனி நமக்கு நாமே என்றுணர்ந்து செய்யும் கடும் பயணம்.
ஆம் எமக்கு - "நமக்கு நாமே", இதனை நன்கு புரிந்து - சதியாளர் செய்யும் பொய் பிரச்சாரமான "இது மக்களுக்கு - நமக்கு நாமமே" போன்ற சதிவலையில் வீழ வேண்டாம்.
மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கானக்கிளம்பிய என்னை வழிமறித்து "அழகிரி பிரச்சினைக்கு என்ன தீர்வு" என்று கொக்கரிக்கும் கேவலர்களை நீ உடனே அடையாளம் கொண்டு ஒதுக்கிட வேண்டுகிறேன்.
இதுவரை கழங்கள் "செம்மொழியாக்கி செய்த பெரும் சேவையால்" இப்போது "அன்பிள உடன்பிறப்பே" என்று கூறினால் எவருக்கும் புரியாததால் "டியர் ஜூனியர்" என்று அவரது மொழியிலேயே அறைகூவல் விடுத்துள்ளேன். இதை அனைவருக்கும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எளிதாக எடுத்து சொல்ல, உங்கள் குடும்பத்தில் ஆங்கில மொழிவாயிலாக படிக்கும் ஒவ்வொருவரும் உதவ வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
அரங்கில் அமர வேண்டியது - முதலில் பொற்கிழி என்று உனக்கு நான் சொல்லித்தரவா வேண்டும் ? இதுநாள் வரை அரசியலில் இருந்து கடும்பாடங்களைக்கற்ற எனக்கு இது கூடத்தெரியாதா ?
63-ஏ வயதான,
இளைய தளபதி இசுடாலின்.
No comments:
Post a Comment