Friday, April 10, 2015

Kalaignar madal parody - 3 on Dayalu's memory loss defense in 2g case.. (in Tamil)

உடன்பிறப்பே,

என்னிணைவி தன்னினைவு இல்லை என்று கூறியதை
ஏதோ செய்யாத ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க செய்யும் சதியென்று
பச்சை தமிழச்சியை தாய்க்குலத்தை
கொச்சை படுத்தி வசை பாடும் கயவரின்
இச்சை என்ன என்ற கேள்வி மனதில் எப்போதும் எழுவதை
துச்சைப்படுத்தி கல்லாக்கி வரைந்த மடலிது.


மனிதனின் ஆறாம் அறிவோடு சிந்தித்தாலே
சந்தி சிரிக்கும் படி உள்ள கழகத்தோரை
இன்னமும் கீழ் நிலைக்கு கொண்டு செல்ல,
ஏழாம் அறிவு வேண்டும் என்று படம் எடுத்த கயவரின்,
கஜினி-யின் நாயகன் நினைவிழந்தபோது
அதை ஆர்பரித்து வரவேற்ற கூட்டம்
இன்று எத்தனையோ பால் கணக்கெல்லாம் நினைவிருந்தும்
ஒரே ஒரு தொலைக்காட்சியின் சற்றே சிறு இருநூறு கோடிகளை மட்டும் எமது நாயகி மறந்ததை கயமை என்பது
பார்ப்பனீயத்தின் சதி என்பது
அகநானூறு மற்றும் புறநானூறு படித்த பச்சை தமிழன்
அறிந்து கொள்ளமாட்டான் என்ற மூடநம்பிக்கை தானே.

எடு உன் போர்வாளை
முகத்திரையைக் கிழி
புடைக்கட்டும் உன் திண்தோள்
நீ ஓடிவருமுன்னே ஒலிக்கட்டும்
உன் பொற்கிழியின் சத்தம்
சிந்தட்டும் இரத்தம் !!!

கடைத்தொண்டன்

கட்டுமரம்.

No comments:

Post a Comment