Thursday, April 2, 2015

Kalaingarin Madal in Murasoli (fiction)... on Good Friday...

Let us try to guess How MuKoo will be feeling now.. This is a work of fiction, my own creation. Any resemblance to living or dead means you have been anointing crooks as politcos/leaders/CMs. Mistake is all yours...
---------------------------------------------------------------------
உடன்பிறப்பே,

நாளை புனிதவெள்ளித்திருநாள். எப்படி இந்நாளில் மற்றவர் கயமைக்காக தன்னுயிர் துறந்த கடவுள் போல, குடும்ப கொள்ளைகளுக்காக என்னை தியாகம் செய்யச்சொல்வது கயமையல்லவே !

பார்ப்பனீயம் இன்று "இரங்கராஜன் பாண்டே" என்று புதிய பெயரெடுத்து வலைத்தளம் முழுவதிலும் அரக்க ஆட்டம் ஆடுவதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.

இன்று, திராவிட சகோதர்களான மாறன்களை, ஆதிக்கவர்க்க அமலாக்கத்துறை மூலம், கடிவாளமிட்டு, அலங்கோலம் செய்துவிட திட்டமிட்டிருக்கும் புதிய ஆரிய சக்திகளை நீ கண்டு கொள்ள வேண்டும்.

இந்த இடர்களுக்கிடைய, நீ பொற்கிழியோடு, கழக தேர்தல் நிதிக்காக ஓடி வரும் காட்சி இனிதிலும் இனியது. கண்கள் பனிக்கின்றன, நெஞ்சம் பதைக்கிறது, நாத்தழுதழுக்கின்றது.

இதை அடுத்தது நான் தான் என்கிற அச்சத்தினால்தான் என்று, தீய சக்திகள் சொல்வதை நீ நம்பிவிடாதே, நெஞ்சம் வெம்பிவிடாதே...

எத்தனையோ இடர்களுக்கிடையே இன்று வரையில், இந்து மதத்துக்கு பகுத்தறிவு, குடும்பத்துக்கு பணத்தறிவு, மற்ற மதங்களுக்கு வோட்டறிவு என்ற கழககொள்கையிலிருந்து சற்றும் சறுக்காத இந்த கடைத்தொண்டனை கயவர்கள் வசை பாடுவதை நீ புரிந்து கொள்வாய்.

கட்டுமரம்.
------------------------------------------------------------------------
(Image courtesy, thuglak fan group)

No comments:

Post a Comment