தம்பி கமலஹாசனின் படம் "உத்தமவில்லன்" நாளை வெளிவரவிருக்கிறது. இதை தடை செய்ய ஆரிய சக்திகள் முடிவு செய்திருக்கின்றன. இதை கழகத்தின் திராவிட சகோதரர்கள் ஒன்று திரண்டு வெகுண்டெழுந்து முறியடிக்கவேண்டும்.
இது என்ன விஸ்வரூபமா, உயிருக்கு பயந்து நான் மௌனம் காக்க ? இந்துக்கள் சகிப்புத்தன்மை உள்ளவர்கள் என்பது அறிந்து தந்தை பெரியார் வழியில், அனைவருக்கு அண்ணா நாமம் போடும் கழகம் இதை கைவிடலாமா ?
இப்போதுதான் நமது தமிழ் மொழி, இன, குல மானங்களையும், வீரங்களையும் காட்டும் தருணம் !
தம்பி கமலஹாசன் கழகக்கொள்கையிலிருந்து சற்றும் மாறாதவர். மனைவியிருந்தும் துணைவியரும்/கலவியரும் வாழ்வுக்கு தேவை என்பதை எப்போதோ உணர்ந்த பெருந்தகையல்லவே அவர் ?
"உத்தமவில்லன்" என்ற பெயரால் ஒருவேளை இது எமது சுயசரிதையோ என்று எண்ணி கலங்கிடாதே. இது நமக்கு முற்றிலும் இணக்கமான இந்து மதத்தை மட்டுமே பழிக்கும் படமென்று தம்பி விளக்கமளித்துள்ளார் எமக்கு ?
நேபாளத்தில் இயற்கையன்னையின் சீற்றத்தை எதிர்கொண்டவர் ஆதித்தமிழனை மதத்தால் அடிமையாக்கியர் என்பதை நினைவில் கொண்டு, கழகத்துக்கு திரும்பட்டும் -- உனது பொற்கிழி !!
கடைத்தொண்டன்
கட்டுமரம்.
No comments:
Post a Comment