நாளை எதோ விடுமுறை நாளாம், சில ஆரிய சக்திகள், குல்லுக பட்டரின் வழி நடந்து இப்போது திக்கி திசை மாறி தத்தளிக்கும் வேளையில், இதை தமிழ் புத்தாண்டு என்று அறிவித்து கொண்டாடுவது வேதனையிலும் வேதனை ! இதற்கு சில கோடாரிக்காம்புகள் துணை போவது இன்னும் கொடிது. மன்மத வருடம் என்பதாலேயே எமது நல்லிணக்கம் இதற்க்கு உண்டு.

இந்த இன்னலுக்கிடையே, தம்பி வீரமணியின் பேரியக்கம் தமிழை வாழவைக்க, தமிழினம் தழைக்க, இனமானம் காக்க, மத நல்லிணக்கம் சிறக்க, சில பெண்கள் அணியும் எதோ ஓர் அணிகலன் ஒன்றை நீக்கபோவதாக அறிவித்திருக்கிறது. அதை கழகரீதியாக ஆதரிக்க மனம்விரும்பினாலும், மனைவியரும், துணைவியரும், இணைவியரும் மிக நிறைந்த குடும்பமல்லவே என்று நினைத்து, கட்டுக்கடங்காத சிட்டுக்குருவி போல் சிறகடிக்கும் மனதிற்கு கடிவாளமிட்டிருக்கிறேன்.

இதை பார்ப்பனீய சக்திகள், வோட்டுபயம் என்று கொக்கரிப்பதை நீ நம்பி விடாதே. இன்று வரை வீட்டுப் பெண்களுக்கு கழுத்தில் தாலி, வெளியோருக்கு பகுத்தறிவு வேலி என்று சற்றும் பிழறாத நடை எமதல்லவெ.

எங்கே உனது பொற்கிழி என்று மனம் விழையுமுன்னே நீ கொள்கை காக்க இரண்டு கோடி கொட்டியதை, கொள்ளை காப்போருக்கு நிதி தேவையா என்று தீய சக்திகள் புலம்புவதை நம்பிவிடாதே !

கடைதொண்டன்,
கட்டுமரம்.