Tuesday, December 8, 2015

MuKoo on Chennai Floods...

உடன்பிறப்பே,

மிதக்கிறது சென்னை,
பதைக்கிறது தமிழகம்...

தவிக்கும் கோதையர்
இன்னல் கண்டு,
மின்னலென எழுந்து
விதைப்போம் 2016-இல் மீண்டும் கழக (குடும்ப) ஆட்சி என்னும் பொற்காலத்தை.

இந்த இடை ஆட்சியை - அம்மையாரின் கடை ஆட்சியாக மாற்றுவோம் !!

நாடு முழுதும், மதவெறி (இந்து மத வெறி மட்டுமே)
மாண்ட மாட்சிமைகளுக்கு எதிரே,
தாண்டவமாடுவதை கண்டு கொள்வோம்.

என்னையே "தமிழர்களுக்காக மிதக்கும் கட்டுமரம், சென்னை வெள்ளத்தில் என்ன ஆயிற்று" என்று கேட்கும் அளவுக்கு சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது, அரக்கத்தனம் நிறைந்துவிட்டது.

கட்டுமரம் வயதினால்
பட்டுமரம் ஆனாலும்
வெட்டுமரமாம் கொடாலிக்காம்பாக என்றும் மாறாது.

இந்த கட்டுமரத்தின் மேல் ஏற்கனவேயுள்ள குடும்பச்சுமை அறிவிலிகளுக்கு எப்படி தெரியும்..? அம்மையார் ஆட்சியில் இருக்கும் போது எம்மை ஏனோ உதவி செய்யச்சொல்வது, "நான் திருமணம் செய்து கொள்கிறேன், நீ பிள்ளை பெற்றுக்கொடு ..." என்பது போலிருக்கிறதே என்று சந்தி சிரிக்கும் தமிழகம் சிந்திக்கவேண்டாமா ...?

வெள்ளத்தில், அல்லல் பட்டு, உள்ளம் கனக்கும் வேளையில் நிதி இன்றியமையாதது என்றுணர்ந்து நீ எடுக்கும் பொர்கிழியின் சத்தம், கேட்கட்டும் நித்தம்...

இன்னும் தமிழனுக்காகவே வாழும்,

கட்டுமரம்.

No comments:

Post a Comment