Tuesday, November 14, 2017

உச்சமடையர் vs. வக்கீல் காமெடி

உச்சமடையர்(உம): வழக்கு என்ன ?

வக்கீல்(வ): ஒரு மருத்துவ கல்லூரி இந்த நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புக்காக லஞ்சம் கொடுத்த ஆதாரம் சிக்கியுள்ளது.

உம: சரி சொல்லுங்கள்...

வ: சம்பந்தப்பட்டவரே எப்படி விசாரிக்கலாம் ?

உம: எல்லாம் எமக்கு தெரியும் !! முடியாது...

வ: இதை ஆய ஒரு சிறப்பு குழு அமைக்கவேண்டும்.

உம: எல்லாம் எமக்கு தெரியும் !! முடியாது...

வ: FIR-ல் இங்குள்ள நீதிபதி என்று ....

உம: எமது பெயர் இருக்கிறதா ?

வ: எப்படி, நீங்கள் தானே நீதிபதிகள் பெயர்கள் மீது சிபிஐ, போலீஸ் FIR போடக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளீர்கள் ?

உம: முற்றிலும் சரி, அதனால் தான் கேட்கிறேன், எமது பெயர் அங்குள்ளதா ?

வ: அதற்குத்தானே விசாரிக்க வேண்டும் என்று...

உம: இருக்கிறதா ?

வ: இல்லை. ஆனால் அது எவெரென்று...

உம: எல்லாம் எமக்கு தெரியும் !! முடியாது...

வ: பிறகு போலீஸ் எப்படி இதை முடிப்பது... ?

உம: எவர் என்று போலீஸ் குறிப்பிட்டு விசாரணை செய்ய வேண்டியதுதானே ?

வ: எப்படி பெயர் குறிப்பிட்டு FIR பதியக்கூடாது என்று நீங்கள்தானே சொல்லியுள்ளீர்கள்... ஆகையினாலேதான்....

உம: எல்லாம் எமக்கு தெரியும் !! முடியாது...


மேலே உள்ள உரையாடலை படித்தபிறகு உங்களுக்கு வடிவேல் காமெடி ரொம்ப சீரியஸான மேட்டராக தோன்றினால் நான் அதற்கு பொறுப்பல்ல...

No comments:

Post a Comment